Rock Fort Times
Online News

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது- திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்…!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று(03-03-2025) தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என மொத்தம் 31,580 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், தனித் தேர்வர்களுக்கு 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 549 பேர் பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வை கண்காணிப்பதற்காக 230 பறக்கும் படையினர் பணி
அமர்த்தப்பட்டுள்ளனர். முன்னதாக தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக தாங்கள் ஏற்கனவே படித்த பாடத்தை மீண்டும் நினைவு கூர்ந்தனர். பின்னர் அந்தந்த பள்ளிகளில் உள்ள கல்வி கடவுள் சரஸ்வதி மற்றும் தங்களது இஷ்ட தெய்வங்களை நினைத்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து தேர்வு அறைக்கு சென்ற மாணவர்களுக்கு 10 மணிக்கு வினாத்தாளும், 10.15 க்கு விடைகள் எழுதும் தாளும் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்