என்ன ஒரு துணிச்சல்: திருச்சி, கொட்டப்பட்டில் அரசு நிலத்தை ரூ.15 லட்சத்திற்கு விற்ற 3 பேர் மீது வழக்கு..!
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 53). இவர் கொட்டப்பட்டு திரு.வி.க. தெருவில் ஒரு இடத்தை வாங்க முடிவு செய்தார். அவரிடம் மூன்று பேர் 1,056 சதுர அடி கொண்ட இடத்தை ரூ.15 லட்சத்திற்கு விலை பேசி உள்ளனர். ஜானகிராமன் ரூ.15 லட்சம் கொடுத்து அந்த இடத்தை வாங்கியுள்ளார். கடைசியில் அவர்கள் விற்ற இடம் அரசு நிலம் என்பதும், அவர்கள் கொடுத்த ஆவணங்கள் வேறு இடத்திற்கான ஆவணங்கள் என்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகிராமன், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அரசு நிலத்தை விற்ற மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.