திருச்சி, அரியமங்கலத்தில் “குபுகுபு” வென பற்றி எரிந்த பிளாஸ்டிக் குடோன்- பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, அரியமங்கலம் கணபதி நகரில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக்கை தூளாக்கி அதனை மறுசுழற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று(27-02-2025) மதியம் சுமார் 1-30 மணி அளவில் குடோனில் இருந்து அதிகளவு புகை வரவே, அருகில் இருந்தவர்கள் குடோன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் காரணமாக தீ “குபு குபு”வென கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments are closed.