திருச்சி, துவாக்குடி பகுதியில் காணாமல் போன செல்போனை ஒரு மணி நேரத்தில் மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு…!
திருச்சி, துவாக்குடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்ணா வளைவு பகுதியில் பூ வாங்க சென்றபோது அவரது செல்போன் காணாமல் போனது. இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் அந்தப்பெண் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், செல்போன் மாயமான பகுதியில் டவர் லொகேஷனை வைத்து விசாரணை நடத்தினார். அப்போது அண்ணாவளைவு பகுதியிலேயே விநாயகர் கோயில் பகுதியில் செல்போன் கீழே கிடந்தது. செல்போனைக் கைப்பற்றிய நாகராஜன், அதனை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தார். தனது செல்போனை பெற்றுக் கொண்ட அந்தப் பெண் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். செல்போன் காணாமல் போன ஒருமணி நேரத்திலேயே அதனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments are closed.