முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் வெல்லமண்டி நடராஜன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் அணியில் அமைப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சரோஜாதேவி. இவர் இன்று(27-02-2025) மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது இல்லத்துக்கு விரைந்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெல்லமண்டி நடராஜன்- சரோஜாதேவி தம்பதியினருக்கு கிருபாகரன், ஜவஹர்லால் நேரு ஆகிய இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.