திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 43). இவர் பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் மொத்த மருந்து வணிகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சுமதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 லட்சத்து 56 ஆயிரத்து 43 ஐ ஜி.எஸ்.டி. வரி கட்டுவதற்காக அனுப்பப்பட்டது. ஆனால், அந்த பணத்தை ரவி ஜிஎஸ்டி செலுத்தாமல் பாரத்குமார், பிங்கி தேவி உள்ளிட்ட நான்கு பேருடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து ஜிஎஸ்டி வரி கட்டியதாக சுமதியை ஏமாற்றியுள்ளார். நாளடைவில் இதனை அறிந்த சுமதி, திருச்சி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நீதிமன்றம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி மாநகர குற்றபிரிவு போலீசார் ரவி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.