நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று(26-02-2025) நடைபெற்றது. தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த்துடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார். இந்த விழாவின் தொடக்கத்தில் மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான “கெட் அவுட் “என்ற பெயரில் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார். இரண்டாவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கையெழுத்திட்ட நிலையில், மூன்றாவதாக பிரசாந்த் கிஷோரை கையெழுத்திட ஆதவ் அர்ஜுன் அழைத்தார். ஆனால், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்து விட்டார். மும்மொழிக் கொள்கைக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவாக செயல்படுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.