Rock Fort Times
Online News

பிப்.24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு…!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 -வது பிறந்தநாள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெ.பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கார்த்திகேயன்,
மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் முத்துகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மீனவரணி மாவட்ட செயலாளருமான கோ.கு. அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் இளைஞர் அணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, பாசறை லோகநாதன், மகளிரணி நசிமா பாரிக், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, சகாபுதீன், ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, அப்பாஸ், இளைஞர் அணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ஜெ.பேரவை தலைவர்
எனர்ஜி அப்துல் ரகுமான், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கலீல் ரஹ்மான், ரோஜர், வாசுதேவன், ஏர்போர்ட் விஜி , வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், சுரேஷ், தினேஷ்பாபு, நிர்வாகிகள் இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், கருமண்டபம் சுரேந்தர், செல்வராஜ், குருமூர்த்தி,
பாலக்கரை ரவீந்திரன், அக்பர் அலி, காசிபாளையம் சுரேஷ்குமார், ரமணி லால், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், கிராப்பட்டி கமலஹாசன், எடத்தெரு பாபு, ராஜ்மோகன், ஜெகதீசன், கதிர்வேல், ராமலிங்கம், ஜெயக்குமார், டைமன் தாமோதரன், ஐ.டி நாகராஜ், தென்னூர் ஷாஜகான், உறந்தை மணிமொழியன், உடையான்பட்டி செல்வம், கே.டி. அன்புரோஸ், கே.டி ஏ. ஆனந்தராஜ், ஆரி, செபா, அப்பாகுட்டி, குமார், பொன். அகிலாண்டம், தர்கா காஜா, கே.பி. ராமநாதன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், கீழக்கரை முஸ்தபா, கல்லுக்குழி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதி கழகங்கள், வட்டக் கழகங்களில் அன்னதானம் வழங்கியும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ஆங்காங்கே கட்சி கொடியினை ஏற்றி சிறப்பாக கொண்டாடுவது. திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு தொகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது. அனைத்து வட்ட கழகங்களிலும் 9 பேர் கொண்ட பூத் கிளை நிர்வாகிகள் நியமிப்பது. ஒவ்வொரு பூத்களிலும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை நியமிப்பது. புதிதாக உருவாக்கப்பட்ட இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் உறுப்பினர்கள் சேர்ப்பது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க அனைவரும் அயராது உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்