ரூ.18 லட்சம் மதிப்பில் 600 பள்ளிக் குழந்தைகளுக்கு ” ஸ்லீப்பிங் கிட் ” வழங்கும் நிகழ்ச்சி! திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் ஆஃப் மிட்டவுண் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தியது! (வீடியோ இணைப்பு)
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட்டவுண், ரோட்டரி கிளப் ஆஃப் அம்பத்தூர் மற்றும் ஸ்காவ் ( Sleeping Children Around the World ) தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து திருச்சி மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 600 குழந்தைகளுக்கு
ரூ.18 லட்சம் மதிப்பில் ஸ்கூல் பேக், பெட்ஷீட், தலையணை, வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகங்கள்,தொப்பி, கர்சிஃப் உள்ளிட்ட 17 பொருட்கள் அடங்கிய ” ஸ்லீப்பிங் கிட் ” வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்ட் வாசவி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் ஆஃப் மிட்டவுன் சங்க சேர்மன் ஜி.கோகுல் கூறும்போது., உலக அளவில் எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்கு, நிம்மதியான தூக்கமும், பள்ளிப்படிப்பிற்கு தேவையான ஸ்கூல்பேக், நோட் புக்ஸ் உள்ளிட்ட பொருட்களும் வாங்க இயலாத சூழல் நிலவி வருகிறது. இதனால் அக்குழந்தைகள் மற்ற வசதியான குழந்தைகளுடன் தங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையுடன் வளர வாய்ப்புள்ளது. இதைகருத்தில் கொண்டு கனடாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ” ஸ்காவ் ” என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் 6 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு “ஸ்லீப்பிங் கிட்”டை இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதுமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி க்ளப் போன்ற சங்கங்களுடன் இணைந்து வழங்கி வருகிறார்கள். அதன்படி இந்தியாவில் தென் மாநிலங்களில் சுமார் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு ஸ்லீப்பிங் கிட் வழங்க ஸ்காவ் அமைப்பு தீர்மானித்துள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று ( பிப்.21ம் தேதி ) திருச்சியில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திருச்சியை சுற்றியுள்ள பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 வயது வரையுள்ள சுமார் 600 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான கிட்கள் வழங்கப்பட்டன.
ஸ்காவ் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்படும் இந்த கிட்டில் ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள பெட்ஷீட், தலையணை, கொசுவலைகள், நோட்டு, புத்தகங்கள், தொப்பி, பேனாக்கள் உள்ளிட்ட 17 வகையான பொருட்கள் அடங்கியுள்ளது.இதைப்பெற்று செல்லும் ஒவ்வொரு குழந்தைகள் முகத்திலும் எல்லையில்லாத சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் பார்க்க முடிந்தது. ஸ்காவ் கிட் பெற வந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், தயிர் பச்சடி, பிரட் அல்வா, வாட்டர் பாட்டில் அடங்கிய மதிய உணவு வழங்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் ஆஃப் மிட்டவுண் சங்கமும் ஒரு அங்கமாக இருந்தது மனதிற்கு மகிழ்ச்சியான விஷயம் என்றார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி 3000 மாவட்டத்தின் கவர்னர் ராஜாகோவிந்தசாமி, முன்னாள் கவர்னர்கள் குணசேகரன், டாக்டர் ஜமீர்பாஷா, திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் ஆஃப் மிட்டவுண் சங்க தலைவர் கே.ஏ.ராமதாஸ், செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெக்ஷ்மி நாராயணன், மாதவ மனோகரன், கௌரி சங்கர் ஸ்ரீனிவாசன், யோகேஷ்,தேவதாஸ், மகேந்திரகுமார், அரவிந்தன், ரவிச்சந்திரன், மதுசூதனன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஸ்காவ் அமைப்பின் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.