திருச்சி, திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன் (வயது 28). ரவுடியான இவர் ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார். அவரை ஸ்ரீரங்கம் தெப்பக்குள தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (27)என்பவர் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டுத்தலை மணி கத்தியை காட்டி சதீஷை மிரட்டியதோடு அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த 500 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் சதீஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன், ஆட்டுத்தலை மணியை கைது செய்தார். அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed.