Rock Fort Times
Online News

“மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை”- சீமானை சீண்டிய டிஐஜி வருண்குமார்…!

திருச்சி சரக டிஐஜி யாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டேவும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திண்டுக்கல் சரக டிஐஜி யாக பணியாற்றிய இவர் அண்மையில் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இந்த தம்பதி குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை குற்றவியல் நீதிமன்றம் எண் நான்கில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி டிஐஜி வருண்குமார் இன்று(19-02-2025) நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சீமான் ஆஜராகவில்லை. ஆகவே, வழக்கு விசாரணைக்காக இருவரும் 07-04-2025 அன்று ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த டிஐஜி
வருண்குமாரிடம் வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, வழக்கு தொடர்பாக எனது வக்கீல் பதில் அளிப்பார் என்றார். சீமான் குறித்து கேட்டதற்கு, நாம் தமிழர் கட்சியினர் என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இனி சமாதானத்திற்கு இடமில்லை, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கை சட்டப்படி சந்திப்பேன். மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்