Rock Fort Times
Online News

திருச்சி, சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு…!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டாகும். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உட்பட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் ஒன்று அமைத்து தர வேண்டுமென திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சூரியூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  அதன்பேரில் சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்காக தமிழக அரசானது கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமையும் இடத்தினை இன்று(16-02-2025) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கங்காதரன் மற்றும் உதயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் உடன் இருந்தனர்‌.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்