தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” படம் சமீபத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.அஜித்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் அதிக பிரியம் கொண்டவர். இதன் காரணமாக அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் வைத்துள்ளார். தற்போது கார் ரேசிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளில் தங்கி பயிற்சியும் எடுத்து வருகிறார். பயிற்சியின் போது ஏற்கனவே அவரது ரேஸ் கார் விபத்தில் சிக்கியது.அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்.சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. இந்தநிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த தகவலை அஜித்குமாரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி. ” ‘இன்றைய பயிற்சியின் போது கூட எனது கார் விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டனர் என கூறியுள்ளார். அஜித்குமாரின் ரேஸ் கார் இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.