அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பிப். 3-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை…!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்கவும், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படியும், பேரறிஞர் அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் வருகின்ற 03.02.2025 (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி சிந்தாமணி அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதுசமயம்
மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.