திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையோர கடைகள் அகற்றம்- மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்…!
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை சாலையோரங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தரைக் கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள்
கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதுகுறித்து திருச்சி மாநகராட்சிக்கு பொதுமக்கள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. அந்தப் புகார்களின் அடிப்படையில் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலை, ஒய்.எம்.சி.ஏ சாலை, ராயல் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட கடைகளை இன்று(01-02-2025) மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் அகற்றினர். அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Comments are closed.