Rock Fort Times
Online News

ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவையில்லை- மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. நேற்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர், 3 கோடி பேருக்கு புதிதாக வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரயில் பாதைகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று (01-02-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

*மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு.

*வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்வு.

வருமானம்- வரி விகிதம்

* ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30 சதவீதம்
* ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை- 25 சதவீதம்
* ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்
* ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை- 15 சதவீதம்
* ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – ரூ.5 சதவீதம்
* ரூ.4 லட்சம் வரை- வரி இல்லை.

புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பது தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக ரூ.75 ஆயிரம் வரை நிலைக்கழிவும் கிடைக்கும். இது நடுத்தர வாழ் மாத ஊதியம் பெறும் மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்