Rock Fort Times
Online News

ஈரோடு-பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து…!

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு-பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி -ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) இன்று முதல் பிப். 1, 3, 6, 8, 10 ஆம் தேதிகளில் கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-பாலக்காடு விரைவு ரயிலானது (16843) பிப். 1 ம் தேதி கரூர் -பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்