Rock Fort Times
Online News

திருச்சி காவிரி ஆற்றில் சம்மர் பீச்! அமைச்சர் கே.என்.நேருவிடம் காங்கிரஸ் கோரிக்கை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் .அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலை அருகே அமைந்துள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையை அகற்றிட வேண்டும்.  மேலும் சிலையின் உள்ளே மாநகராட்சியால் போடப்பட்ட மின்விளக்குகள் சரியாக எரியாததனால், ஒரே இருட்டாக இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் மதுபான பிரியர்கள் சிலையை சுற்றி உள்ள காம்பவுண்டை அசுத்தப்படுத்துகிறார்கள் .மேலும் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. எனவே உடனடியாக அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருச்சி காவிரி ஆற்றில் எப்போதும் அமைப்பது போல் சம்மர் பீச் அமைத்து திருச்சி மக்கள் குறைந்த செலவில் தனது பொழுதை இந்த கோடை காலத்தில் போக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள் எனவே பொதுமக்கள் கோரிக்கையாக மக்கள் விருப்பப்படி சம்மர் பீச் அமைத்து தர வேண்டும் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜீவா நகர் மாரிமுத்து, விஜயகுமார், பட்டேல், அரியமங்கலம் சுதாகர், பஜார் மைதீன், பாலக்கரை மாரியப்பன், நிர்மல் குமார், கோகுல், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்