Rock Fort Times
Online News

மதுரையில் 35 கி.மீ.தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம்! பிரதமர் மோடி காணொளி மூலம்திறந்து வைத்தார்!

மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம்ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து,நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு
ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலை
யாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.
2018ம் ஆண்டு இதற்கானபணிகள்
தொடங்கியது.இந்த
சாலையில் மதுரை தல்லாகுளம் முதல்
– ஊமச்சிகுளம்
வரை சுமார் 7.5 கி.மீ. தொலைவுக்கு
ரூ.612 கோடியில் பறக்கும் பாலம்
அமைக்கும்பணிகள்
முடிவடைந்துள்ளது. இந்த பறக்கும்
பாலத்தின் அடியில் 150அடி இடைவெளியில்பலமான அஸ்திவாரத்துடன்268 தூண்கள்கட்டப்பட்டுள்ளன.தூண்களின் இடையேபாலத்தை இணைக்கும்வகையில் கிடைமட்டவாக்கில் ‘கான்கிரீட்கர்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.
மதுரை நகர் பகுதியில் போக்குவரத்துநெரிசலை குறைக்கும்வகையிலும்,
|மதுரையில் இருந்து திருச்சிமற்றும்சென்னைக்கு செல்லும்
பயணத்தொலைவை குறைக்கும் வகையிலும்
இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.
இந்த பறக்கும் பாலம் வழியாகதிருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயணதூரம் குறையும். இதே போல் இந்தபாலத்தின் வழியாகசென்னைசெல்வோர்பயண நேரம் 1 மணி நேரம்குறையும். இந்தநிலையில் நேற்று
8ந் தேதி சென்னையில் இருந்து பிரதமர்
மோடி காணொளி வாயிலாக இந்தப்
பாலத்தை திறந்து வைத்தார். வாகன ஓட்டிகள் பறக்கும் மேம்பாலம் வழியாக ஆர்வமுடன்பயணித்தனர்.
இந்தப் பாலம்
தமிழகத் திலேயே மிகநீண்ட பாலமாக
கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்
தக்கது

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்