திருச்சி கிழக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா பிஷப் ஹைமன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார் . செயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு
அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் ஹேமில்டன் வெல்சன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மத்திய மண்டல செயலாளர் டேவிட் சாலமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில ஆர்சி துணை செயலாளர் வின்சென்ட், மாநில துணை அமைப்புச் செயலாளர்கள் அலெக்ஸ் ராஜா, சாம்ராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்னை ஆண்டனி, மாவட்ட பொருளாளர் ஞானப்பிரகாசம், செய்தி தொடர்பாளர் தன்ராஜ், ஒருங்கிணைப்பாளர் அமிர்தராஜ், மாவட்ட துணை அவை தலைவர்கள் டாக்டர் ஏனோக், போதகர் ஸ்டீபன், வாசுகி, அமலா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோஸ்வா ஜெயக்குமார், லூயிஸ், செல்வி, மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, இளைஞரணி செயலாளர் ஜான் பிரகாஷ், மாவட்ட ஆர்சி அமைப்பாளர் ஹென்றி வளையாபதி, மாவட்ட பி.சி.அமைப்பாளர் பொன்பிரிட்டோ, மாவட்ட சிஎஸ்ஐ அமைப்பாளர் தேவதாஸ் சாமுவேல், மாவட்ட டிஇஎல்சி அமைப்பாளர் ஜான் பாஸ்கர், தொகுதி செயலாளர்கள் கனகராஜ், ஜேம்ஸ், மைக்கேல் ஆல்பர்ட், பகுதிச் செயலாளர்கள் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், ஜான்போஸ்கோ , தினகரன், லூர்துராஜ், பகுதி பொறுப்பாளர்கள் சேவியர்ராஜ், ஆரோக்கியராஜ் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை யேசுமரி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், அலுவலக உதவியாளர் ஜூலி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 948
Comments are closed.