அரசை குறை கூறிவரும் அ.தி.மு.க.வுக்கும், அரைவேக்காடு அரசியல் நடத்தி வரும் கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்- திமுக செயற்குழுவில் அதிரடி தீர்மானம்…!
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று(22-12-2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்பி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் என 850-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2026ம் சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க. செயற்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது.
* ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டுவது
* புயல்- வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது.
* மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ஆதரித்த அதிமுகவை செயற்குழு கண்டிக்கிறது
மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ஆதரித்த அதிமுகவை செயற்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்வது
டங்ஸ்டன் கனிம ஏலம்விட்ட பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் கபட நாடகம் போடுவதற்கு கண்டனம்.
* குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொள்வது.
கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது
* தமிழ்நாட்டுக்கு உரிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாக கண்டனம்
* அரசை குறை கூறிவரும் அ.தி.மு.க.வுக்கும், அரைவேக்காட்டு அரசியல் நடத்தி வரும் சில அரசியல் கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed.