Rock Fort Times
Online News

டாஸ்மாக் கடைகளில் க்யூ ஆர் கோடு முறையை கொண்டு வந்தும் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் அடாவடி வசூல்-( வீடியோ இணைப்பு)

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் போலி மது வகைகள் மற்றும் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க க்யூ ஆர் கோடு பில்லிங் முறையை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 159 அரசு மதுபான கடைகளில் க்யூ ஆர் கோடு முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் க்யூ ஆர் கோடு மூலம் விற்பனை செய்வதால் மதுபிரியர்கள் கேட்கும் மது வகைகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். போலி மதுபானங்களை ஒழிப்பதற்காகவும், மதுபான கடையில் ஒரு பாட்டிலுக்கு அதிக விலை விற்பதை தடுப்பதற்காகவும் இந்த க்யு ஆர் கோடு முறை கொண்டு வந்த நிலையில், திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமுளூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் க்யூ ஆர் கோடு மற்றும் ஸ்கேன் முறையில் விற்பனை செய்யும் போது ஒரு குவாட்டருக்கு 5 ரூபாய் அதிகமாக அடாவடி வசூல் செய்கிறார்கள். இதுகுறித்து மது பிரியர்கள் கேள்வி கேட்டால், மது பாட்டில்களை லாரியில் இருந்து இறக்கும் ஊழியர்களுக்கு கூலி யாரிடம் கேட்பது, உடையும் பாட்டில்களுக்கு யார் கொடுப்பது? உங்களிடம் தான் வாங்க முடியும் என பகிரங்கமாக பேசுகிறார்கள். இதுதொடர்பாக மதுபிரியர் ஒருவர் கூறும்போது, ஒரு குவாட்டருக்கு 5 ரூபாய் என வசூல் செய்கிறார்கள். ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு வசூல் செய்யும் தொகை எவ்வளவு?. இதில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தான் நினைக்க தோன்றுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்