தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள யோகா அகாடமியில் “யோக மாவீரர்” போட்டி- டிசம்பர் 14, 15 தேதிகளில் நடக்கிறது…!
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, வளம்பக்கூடி அருகே இயற்கை சூழலில் யோகாப்பியாசா (யோகா அகாடமி) அமைந்துள்ளது.
யோகா குரு ஸ்ரீ செந்தில்குமார், மனித உடல் மற்றும் மனதின் ஆற்றலை மேம்படுத்தக்கூடிய பாரம்பரிய ஹட யோக பயிற்சிகளை கற்றுக் கொடுப்பதற்காக இதை நிறுவியுள்ளார். இங்கு, ஹட யோக பயிற்சிகள் மற்றும் யோக சிகிச்சை பயிற்சிகள் குறிப்பாக முதுகு தண்டுவடம் மற்றும் மூட்டுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் யோக மாவீரர் (Yoga Warrior) எனும் சிறப்பு போட்டியும் நடத்தப்படுகிறது. உடல் மற்றும் மனதை நேர்கோட்டில் வைத்து மனிதனின் எல்லையில்லா அபார சக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் யோக வீரர்கள் இதற்காக ஒரு வருட காலம் சிறப்பு பயிற்சி எடுத்து கலந்து கொள்வார்கள். 2024 யோக வீரர் போட்டியில் 13 போட்டிகள் உள்ளன. ஒவ்வொரு போட்டியும் வீரர்களின் உடல் வலிமை, மன வலிமை, தாக்குப் பிடிக்கும் திறன் மற்றும் மிகவும் கடினமான நேரத்தில் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவற்றை பரிசோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. உதாரணமாக, 3 மணி 40 நிமிடத்தில் 1008 முறை சூரிய நமஸ்காரம் செய்தல், 1 மணி 20 நிமிடத்தில்1008 முறை ஹிந்து தண்டால் பைதக் செய்தல், 1 கி.மீ பாதஹஸ்த்தாசனா நடை (கால் கட்டை விரல்களை பிடித்துக் கொண்டு நடத்தல்). இதுபோன்று 13 போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பவர்களே யோக வீரர்கள் 2024 ஆக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு இவ்வருடம் 13 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போட்டிகள் டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும், ஒவ்வொரு வருடமும் புதிதாக வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடிப்படை யோகா வீரர் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த அடிப்படை முகாமில் கலந்து கொள்வதன்மூலம் யோகா மகாவீரர் போட்டியின் முதல் நிலை பலனை உணர முடியும். மேலும், விவரங்களுக்கு யோகா பியாசா யோகா அகாடமி, துருசிப்பட்டி, பூதலூர் தாலுக்கா, தஞ்சாவூர் என்ற முகவரியிலோ அல்லது 98438 55661 என்ற செல்போன் எண்ணிலோ, அல்லது yogapyasa. www.yogapyasa.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.