Rock Fort Times
Online News

வணிகர்களுக்கு வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற கோரி திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…!

மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்...!

வணிகர்களுக்கு வாடகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படுவதை கண்டித்தும், அதனை திரும்ப பெற கோரியும் திருச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் இன்று(11-12-2024) ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச்செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பின்னர் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு நிருபர்களிடம் கூறுகையில், ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரை பல்வேறு குழப்பங்களுடன் இச்சட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகையுடன் கூடுதலாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மிகப்பெரிய பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வரி விதிப்பை திரும்ப பெறக்கோரி பேரமைப்பு சார்பில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலை நகரங்களில் இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் வியாபாரிகளை திரட்டி மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் எஸ்.கந்தன், கேஎம்எஸ் ஹக்கீம், ரங்கநாதன், தொட்டியம் செல்வராஜ்,
மாநில இணை செயலாளர்கள் கமலக்கண்ணன், ஸ்ரீராமகுமார், ராஜாங்கம், திருப்பதி, திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில் பாலு ,திருச்சி மாவட்ட பொருளாளர் வெங்காய மண்டி தங்கராஜ், மாநகர செயலாளர் ஏஒன் ஹோட்டல் ஆறுமுகப்பெருமாள்,மாநகரப் பொருளாளர் ஜானகிராமன், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம், செயலாளார் கார்த்திக், பொருளாளர் பிரசன்னன், திருச்சி மாநகர இளைஞரணி தலைவர் கேஎம்எஸ் மைதீன், செயலாளர்-செய்தி தொடர்பாளர் திருமாவளவன், பொருளாளர் அப்பாத்துரை, டோல்கேட் ரமேஷ்மற்றும் தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு, மளிகை மண்டி சங்கம், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம், ஜுவல்லரி அசோசியேசன், டெக்ஸ்டைல் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, மாநகர இளைஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட இணைச்செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கிளைச்சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்