திருச்சி, தில்லைநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் 12.12.2024 (வியாழக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக தில்லைநகர் முதல் கிராஸ் (மேற்கு), இரண்டாவது கிராஸ், மூன்றாவது கிராஸ், சாஸ்திரி ரோடு வடகிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 கிராஸ் வரை, தேவர் காலனி, சாலை ரோடு கிழக்கு (தில்லைநகர் சந்திப்பு முதல் மாரீஸ் மேம்பாலம் வரை), மலைக்கோட்டை காலனி, கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாமலை நகர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய தென்னூர் செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.