Rock Fort Times
Online News

திருச்சி, துவாக்குடி பகுதியில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் – கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை…!

திருச்சி, துவாக்குடி அரைவட்டச் சாலையில் எலந்தப்பட்டி அருகே, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகாயங்களுடன் சலடமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. அவர் சென்ற இருசக்கர வாகனம் அருகில் கிடந்தது. அவரது கைப்பேசியை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தஞ்சாவூர் பர்மா காலனி, விளார்சாலை பகுதியைச் சேர்ந்த கோ.ராஜேஷ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக திருச்சி வந்தார்?, அவர் சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ்க்கு அம்மு என்ற மனைவி, தனசேகர் என்ற மகனும் உள்ளனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்