Rock Fort Times
Online News

இயக்குனர், எழுத்தாளர் ஜெயபாரதி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி…!

பிரபல நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர் ஜெயபாரதி. அப்போது அவர் சினிமா விமர்சனங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எழுதுவதில் திறமை வாய்ந்தவர். இதனால், பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்த அவர் தரமான சினிமா படங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் சிரமப்பட்டு நண்பர்களின் உதவியோடு படங்களை இயக்கினார். அவர் இயக்கிய படங்களில் “குடிசை” பல்வேறு விருதுகளை பெற்ற படமாகும். மேலும், ரெண்டும் ரெண்டும் ஐந்து, உச்சி வெயில், நண்பா நண்பா, புத்திரன், குரு ஷேத்திரம் போன்ற படங்களை இயக்கினார். பத்திரிகையில் உதவி ஆசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட ஜெயபாரதி (வயது 77), உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்