மழையின் காரணமாக திருச்சியில் மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்தது – புதிதாக கட்டிக் கொடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்பாடு…!
திருச்சி மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா ( வயது 75). இவரது மகன் கணேசன் (55). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக அவர்கள் வசித்து வந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது. இதுகுறித்து அறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று இடிந்த வீட்டை பார்வையிட்டு மூதாட்டிக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரணத்தொகை வழங்கினார். பின்னர் அதிகாரிகளிடம் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான தேவையான பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். அப்போது, கிழக்கு மாநகர திமுக செயலாளர் மற்றும் மாநகராட்சி மண்டலகுழு தலைவர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் சீதாலட்சுமி, வட்டக் கழகச் செயலாளர் தமிழ்மணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.