திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைகடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார். இந்த நிலையில் நகைக்கடையில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது 585 கிராம் தங்க நாணயங்களை காணவில்லை. இதையடுத்து அவர் விசாரணை நடத்திய போது, தங்க நாணயங்களை அதே நகைகடையில் வேலை பார்க்கும் கேஷியர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 32) திருடியது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ரவிக்குமார் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காசாளர் ஒருவர் தங்க நாணயங்களை திருடிய சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.