Rock Fort Times
Online News

திருவானைக்காவல் கோயிலில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்ட தேரை இழுத்து பரிசோதனை

திருச்சி, திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மாதத்தில் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெறும். இதில், சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். மிகப்பெரிய தேரான இந்த இரண்டு தேரில் ஏற்கனவே அம்மன் தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் சுவாமி தேரில் ரூ.6.50 லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரேக் சரிவர செயல்படுகிறதா? என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி தேருக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின் கோயில் உதவி ஆணையர் லட்சுமணன் முன்னிலையில் சுவாமி தேர் 2 பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 100 அடி தூரத்திற்கு இழுக்கப்பட்டது. அப்போது ஹைட்ராலிக் பிரேக் கொண்டு நிறுத்தப்பட்டு பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. பின்னர் மீண்டும் தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. திடீரென்று சுவாமி தேர் இழுக்கப்பட்டது அறிந்த பக்தர்கள் பெருமளவில் கூடினார்கள். பின்னர் ஹைட்ராலிக் பிரேக் பரிசோதனை என்று தெரிந்ததும் கலைந்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்