10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும்(24-11-2024) நாளையும்(25-11-2024) நடைபெறுகிறது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில், ரூ.7.50 கோடிக்கு டேவிட் மில்லரை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி. ஐதராபாத் அணி ரூ.10 கோடிக்கு முகமது ஷமியை ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ . 11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி. ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க டில்லி, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இரு இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.