Rock Fort Times
Online News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 487 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர்: ஜெய்ஸ்வால், விராட் கோலி சதம் அடித்து அசத்தல்…!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று(24-11-2024) நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. நான்காவது நாள் ஆட்டம் நாளை 25-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. எஞ்சிய 7 விக்கெட்டைகளையும் இந்தியா கைப்பற்றினால் நாளைய தினமே ஆட்டம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்