துவரங்குறிச்சி அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி உயிரோடு எழுந்ததால் பரபரப்பு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியை அடுத்த வேலக்குறிச்சி எஸ். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பம்பையின் மனைவி சின்னம்மாள் (60) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளார். இதனால், அவர் இறந்து விட்டதாக கருதிய உறவினர்கள் இறுதிச் சடங்குகள் செய்து மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கடைசி கட்ட சடங்குகள் நடந்த போது அந்த மூதாட்டி திடீரென கண்விழித்தார். இதனால், உறவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இறந்ததாக கருதிய மூதாட்டி உயிருடன் எழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
Comments are closed.