பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்- திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார்…!
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள முதல் 6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 59-வது வார்டு கல்லுக்குழியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் 50 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகங்களை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார். இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கௌசல்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகினி சில்சியா மற்றும் திமுக பகுதி செயலாளர் மணிவேல், மாமன்ற உறுப்பினர் கீதா பாலமுருகன், வட்டச் செயலாளர் கணேசன் மூர்த்தி, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.