திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி மையத்தில் டெலிபோன் எங்கே? கடிந்து கொண்ட அமைச்சர்…விழி பிதுங்கி நின்ற பேராசிரியர்கள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பிற்கான வழிகாட்டுதல்கள், சேர்க்கை விவரங்கள் போன்ற தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக ” உதவி மையம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று(12-11-2024) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், உயர் கல்வித்துறை கூடுதல் செயலர், உயர் கல்வித்துறை இயக்குனர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இந்தநிலையில் அந்த சேவை மைய டேபிளில் அமர்ந்த அமைச்சர் கோவி.செழியன், அங்கு டெலிபோன் இல்லாததால் இந்த சேவை மையத்திற்கான டெலிபோன் எங்கே? என்று கேட்டார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த துணைவேந்தர் செல்வம் மற்றும் பேராசிரியர்கள் அருகில் உள்ள டேபிளில் உள்ளது என்று பதில் அளித்தனர். இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த அமைச்சர், உதவி மையம் அமைத்தன் நோக்கமே மாணவர்களுக்கு மூன்று வகையில் உதவி புரிய வேண்டும் என்பதற்காகவே. ஒன்று உதவி மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உண்டான விளக்கம் அளிப்பது, மற்றொன்று இமெயில் மூலம் விளக்கம் அளிப்பது, மூன்றாவது நேரடியாக வருவோர்க்கு விளக்கம் அளித்து சேவை புரிவது. இதில், பெரும்பாலும் டெலிபோனைத் தான் பல மாணவர்கள் தொடர்பு கொள்வர். முதல் நாளிலேயே உதவி மையத்தில் டெலிபோன் இல்லை என்றால் எப்படி பதில் அளிப்பீர்கள். உடனடியாக டேபிளில் டெலிபோனை எடுத்து வைக்குமாறு கடிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக உதவி மையத்தில் டெலிபோன் எடுத்து வைக்கப்பட்டது.
Comments are closed.