ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை (13-11.2024) புதன்கிழமை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்த நகர், ரயில் நிலைய சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சித்திரை வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மாமண்டபம் சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக் காவல், சந்நிதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர், பஞ்சகரை சாலை, அருள்முருகன் கார்டன், ராகவேந்திரா கார்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவெண்ணை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம்
இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.