போதிய மருத்துவர்கள் நியமிக்க கோரி உப்பிலியபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் சுமார் 65 ஆயிரம் மக்கள் நலன்கருதி 1997ம் ஆண்டு தமிழக அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவித்தது. இங்கு, தினமும் 300க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்பொழுது இரு மருத்துவர்கள் மட்டும் சுழற்சி முறையில் சிகிச்சை அளிப்பதாகவும், அப்பகுதி மக்கள் சிகிச்சை பெற வரும் பொழுது அதிக நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, கூடுதல் மருத்துவர் நியமிக்க கோரி அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தர வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து பொதுமக்களுடன் இணைந்து துறையூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.