Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம் மணிகண்டம், அளுந்தூர், பெட்டவாய்த்தலை பகுதிகளில் நாளை 12-ம் தேதி மின்தடை…!

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் மணிகண்டம், அளுந்தூர், பெட்டவாய்த்தலை பகுதிகளில் நாளை (12.11.2024) செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அளுந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அளுந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமா நகர், சூறாவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, கீழப்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, கலிமங்கலம். குன்னத்தூர், பிடாரம் பட்டி, சூரகுடிபட்டி, அம்மன் ஸ்டீல் பகுதி, இ.மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐஐஐடி பகுதிகள், பள்ளப்பட்டி, இனாம்குளத்தூர், புதுக்குளம், சின்னாளம்பட்டி, யாகபுடையான்பட்டி, தோப்புபட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மணிகண்டம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகலூர், தீரன்மா நகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் பெட்டவாய்த்தலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையார்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான் தோப்பு, திருமுருகன் நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான் பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்