திருச்சி மத்திய மாவட் திமுக செயற்குழு கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் மேயர் மு. அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழுக் கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக துணை முதல்வராக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாமில் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவது, 2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தலைமை கழகத்தின் சார்பில் திருச்சி மேற்கு தொகுதிக்கு பழஞ்சூர் செல்வம், லால்குடி தொகுதிக்கு ஆடுதுறை, உத்திராபதி, திருவரங்கம் தொகுதிக்கு சந்திரசேகர் ஆகிய தொகுதி தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து கழக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வழியுறுத்தியது, மறைந்த முசொலி செல்வத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில்,அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த்,சேர்மன் துரைராஜ்,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்துச்செல்வம், கலைச்செல்வி,பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், ராம்குமார், நாகராஜன், கமால் முஸ்தபா, இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,திருச்சி மாநகர அயலக அணி அமைப்பாளர் அகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,நிர்வாகிகள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், அரவானூர் தர்மராஜன்,அயூப் கான் உள்ளிட்ட ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Comments are closed.