திருச்சி, திருவெறும்பூர் எழில்நகரைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி சத்யகலா (35). இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், 10ம் வகுப்பு பயிலும் அவரது மகள் பெயர், அவர் பயிலும் பள்ளியின் பெயரையும் கூறி, மாணவிக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் ரூ.28 ஆயிரம் வழங்கவிருப்பதாகவும், அதற்காக வங்கி விவரங்களைக் கூறுமாறு கேட்டுள்ளார். ஆனால், சத்யகலா விவரங்களைக் கூற மறுத்த நிலையில், மர்ம நபர் தான் அரசு அலுவலர் எனக் கூறி அரசு முத்திரையுடன் கூடிய விவரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி நம்ப வைத்து ஏமாற்றி வங்கி விவரங்களை பெற்றார். சிறிது நேரத்தில் சதயகலா வங்கிக் கணக்கிலிருந்த ரூ.19, 890 எடுக்கப்பட்டது. பிறகு அந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதுகுறித்து திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைமில் சத்யகலா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.