திருச்சி, ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.69 ஆயிரம் பறிமுதல்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகன உரிமம் பெறுவது, வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆர்டிஓ அலுவலகத்தில் சிலர் லஞ்சம் வாங்குவதாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் இன்று(23-10-2024) ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தற்போது வரை ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளரிடம் ரூ.20,300 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல வட்டார போக்குவரத்து அலுவலர் பவுலின் என்பவரிடம் ரூ.40,200 கணக்கில் வராத பணம் சிக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், புரோக்கர்கள் 8,000 ரூபாயை தூக்கி எறிந்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

Comments are closed.