Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்க துறை சோதனை… !

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(23-10-2024) அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.  தற்போது முன்னான முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளராக உள்ள வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.  சென்னை பெருங்களத்தூரில் தனியார் கட்டுமான நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்குவதற்கு பெருமளவு லஞ்சம், அப்போதைய அமைச்சரான வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது.  இதுதொடர்பாக வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது வஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.  இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் இன்று அதிகாலை முதல் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியின் நிர்வாகத்திடம் சாவியை பெற்று வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்  அதேபோல, ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அரசியல்  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 916

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்