மணப்பாறை அருகே, வீரமலை பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடப்பதால் 21, 22 தேதிகளில் பொதுமக்கள் நடமாட தடை – திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்…!
திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் 21.10.2024 மற்றும் 22.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் காலை 7-30 மணி முதல் மாலை 5-30 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே, அந்த இரு நாட்களில் அந்த வழியாக பொதுமக்கள் நடமாடவோ, மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Comments are closed.