Rock Fort Times
Online News

ஆரஞ்சு அலார்ட்டை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம்…!

திருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல்  6 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலமானது நேற்று 16.10.2024 இரவு 8 மணிக்கு தொடங்கி இன்று  17-ம் தேதி மாலை 5.38 மணி வரை நடைபெறுகிறது. இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 16, 17-ந் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.  கனமழை காரணமாக பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.  ஆனால், புரட்டாசி மாத பௌர்ணமி தினமான நேற்று திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆரஞ்சு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றி வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.  அதன்படி, பார்த்தால் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்