தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று (அக்டோபர் 16) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.