Rock Fort Times
Online News

மழையால் பாதிப்பு ஏற்பட்டால் காவல்துறையும் களம் இறங்கும்- உதவி எண்களை அறிவித்தார், திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ்…!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக  பெய்து வருகிறது.  தலைநகர் சென்னையில் மழை வெளுத்து வாங்குகிறது.  திருச்சியில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன.  இவர்களுடன் இணைந்து மாநகர காவல் துறையும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் களம் இறங்க தயார் நிலையில் உள்ளன.  இதுதொடர்பாக திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் கூறுகையில்,  மாநகர காவல்துறை சார்பில் பருவமழை வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக பேரிடர் மீட்புகுழுவினர் பாதுகாப்பு உபரகணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.  துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்களுடன் கலந்தாலோசித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாநகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பகுதிகளை கண்காணிக்கவும், அப்பகுதியிலிருந்து பொதுமக்களை உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லவும்,மாநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர். நீச்சல் தெரிந்த காவலர்கள் இப்பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பருவ மழையால் பாதிப்புக் குள்ளாகும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால், அல்லது தகவல் தெரிவிக்க, நுண்ணறிவுப் பிரிவு அலுவக எண்கள் : 0431 – 2331929, 94981 00615, (வாட்ஸ்அப்) 96262 73399, காவல் கட்டுப்பாட்டு அறை அலுவக எண்: 0431-2418070 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்