Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் பங்கேற்பு…!

திருச்சி மாநகர் மாவட்டம், காந்தி மார்க்கெட் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மரக்கடை சந்தன மஹாலில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  அமைப்புச்செயலாளர் டி.ரத்தினவேல் ஆலோசனை வழங்கினார்.  முன்னதாக பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா வரவேற்றார்,  கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் பேசும்போது,  பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. இந்த ஆட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கு வரி விதிக்கின்ற ஒரு ஆட்சி இங்கு நடக்கிறது. சாலை போடுவதில் 40 சதவீத கமிஷனை பெறுகிறார்கள். தமிழகத்தில் 2026 ல் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஆட்சிக்கு வருவார் என கூறினார். அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் பேசும்போது, அதிமுக ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பலம் இல்லாததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது யார் முதல்வர் என வினா எழும். அப்போது மக்கள் விரோத திமுக அரசுக்கு விடை கொடுத்து எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வார்கள். இந்த இயக்கம் பல வெற்றி தோல்விகளை கண்டுள்ளது.  தோல்வி நிரந்தரம் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவை பின்பற்றி எடப்பாடியார் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரது தொலைநோக்கு பார்வையால் இன்றைக்கு அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு நனவாகி உள்ளது.

இந்த இயக்கம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு எழும். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமர்வது உறுதி என்றார். கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் வனிதா பத்மநாதன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வக்கீல் முத்துமாரி, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், புத்தூர் ராஜேந்திரன், நிர்வாகிகள் இலக்கிய அணி பாலாஜி, எம்ஜிஆர் மன்றம் கலிலுல் ரகுமான், ஐ.டி.பிரிவு வெங்கட், வாழைக்காய் மண்டி சுரேஷ், மார்க்கெட் பிரகாஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், கருமண்டபம் சுரேந்திரன், நாட்ஸ் சொக்கலிங்கம், வக்கீல் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் லாவண்யா செல்வராஜ், எனர்ஜி அப்துல் ரகுமான், ரஜினிகாந்த், கே.கே.நகர்சதீஷ், மாவட்ட பிரதிநிதி காசிபாளையம் சுரேஷ்குமார், காந்தி மார்க்கெட் பகுதி கழக நிர்வாகிகள் தவசி ராணி, முகுந்தன், குமாரி, வட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், கண்ணன். ராமலிங்கம், தியாகராஜன், அரப்ஷா, கே.டி.தங்கராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின் தீர்மானங்களை வாசித்தார். முடிவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் டி. சுரேஷ் குமார் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்