கொழுந்துவிட்டு எரிந்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்: பதை பதைக்கும் வீடியோ இணைப்பு…!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுதர்சன்புரா புலியாவை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த காரில் திடீரென தீப்பற்றியதால் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். சிறிது நேரத்தில் கார் முற்றிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. பின்னர் விபத்துக்குள்ளான கார் திடீரென சாலையில் வேகமாக ஓடியது. கார் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கீழே போட்டுவிட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சாலையில் பரபரப்பான போக்குவரத்து இருந்தபோதிலும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. காரில் இருந்தவர்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. கார் எதனால் தீப்பிடித்தது என்பது குறித்து அந்த மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.