ஆயுத பூஜை மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இன்று(13-10-2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06003) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.