Rock Fort Times
Online News

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து எதிரொலி: 18 ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு…!

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா
சென்று கொண்டிருந்த விரைவு ரயில் திருவள்ளூர் – கவரப்பேட்டை மார்க்கத்தில், ‘லுாப் லைனில்’ நின்றிருந்த சரக்கு ரயில் மீது, நேற்றிரவு 8-30 மணியளவில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று (12-10-2024)  18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

* ரயில் எண்.16111 திருப்பதி – புதுச்சேரி ரயில்

* ரயில் எண்.16112 புதுச்சேரி – திருப்பதி ரயில்

* ரயில் எண்.16203 சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

* ரயில் எண். 16204 திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண்.16053 சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

* ரயில் எண்.16054 திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண்.16057 சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

* ரயில் எண்.16058 திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண்.16401 அரக்கோணம் – புதுச்சேரி ரயில்

* ரயில் எண்.16402 கடப்பா – அரக்கோணம் ரயில்

* ரயில் எண்.06727 சென்னை சென்ட்ரல் – திருப்பதி
* ரயில் எண். 06728 திருப்பதி- சென்னை சென்ட்ரல்

* ரயில் எண் 06 753 அரக்கோணம்- திருப்பதி எக்ஸ்பிரஸ்
* ரயில் எண் 06754 திருப்பதி- அரக்கோணம் ரயில்
* ரயில் எண் 12711 விஜயவாடா- சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ்
* ரயிலியன் 12712 சென்னை சென்ட்ரல்- விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்

*ரயில் எண் 06745 சூலூர்பேட்டை- நெல்லூர் எக்ஸ்பிரஸ்

* ரயில் எண் 06746 நெல்லூர்- சூலூர்பேட்டை எக்ஸ்பிரஸ்

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்